Court Judgement On Rape Case: மிஸ்ட்டு காலில் பழக்கம்; 23 வயது இளம்பெண் பலாத்கார வழக்கில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். சட்டங்கள் கடுமையாகும் பட்சத்திலேயே, சில குற்றங்கள் அடியோடு குறைக்கப்படும்.

Sexual Abuse | Court Judgement, Both File Pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 28 , பொக்காரோ (Jharkhand News): பீகார் மாநிலத்தில் உள்ள பொக்காரோ மாவட்டம், அர்வால் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் குமார் சிங். இவர் கடந்த 2021ம் ஆண்டு 23 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவருக்கு எதிரான நீதிமன்ற குற்றசாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் ஆகியவை தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு மிஸ்டு கால் காய்ப்பு வந்த நிலையில், அதன் மூலமாக பெண்ணிடம் பழகி பொக்காரோ வரவழைத்து இருக்கின்றனர். அங்கு இருவரும் விடுதியில் தங்கியிருந்த நிலையில், உணவில் போதைப்பொருள் கலந்துகொடுத்து யோகேஷ் 23 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்; 500 கிமீ ஆழத்தில், ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவு.!

இந்நிகழ்வை வீடியோ எடுத்து வைத்தவர், அதனை பெண்ணிடம் காண்பித்து பலமுறை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருகட்டத்திற்கு மேல் யோகேஷுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர். விசாரணையில் உண்மை அம்பலமானதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement