TDP Dalit Leader Posco Case Accuse Narayana Rao (Photo Credit: @TeluguScribe X)

அக்டோபர் 23, காக்கிநாடா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டம், துனி பகுதியில் வசித்து வருபவர் தடிகா நாராயண ராவ். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகி ஆவார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை கோரும் சமூக ஆர்வலராகவும் இருந்து வந்துள்ளார். இதனால் அங்குள்ள பகுதியில் முக்கியஸ்தர் போலவும் வலம்வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று நாராயண ராவ் 13 வயதுடைய சிறுமி ஒருவரை குருகுல பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள வேறொரூ நபரின் தோப்பு ஒன்றுக்கு சிறுமியை அழைத்துச் சென்றவர், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து இருக்கிறார். Gold Silver Rate: குறையும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் இறங்குமுகம்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.! 

சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சி:

இந்த செயலை தோட்டத்தின் உரிமையாளர் கண்டுகொண்டு, நாராயண ராவை கண்டித்து இருக்கிறார். சிறுமியை மீட்டவர், அவரது பெற்றோரிடம் நடந்ததை கூறி ஒப்படைத்து இருக்கிறார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாராயண ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, அழைத்துச்சென்றனர். அப்போது, ஏரிக்கரை ஒன்றில் வாகனத்தை நிறுத்தச்சொன்ன ராவ், சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

போக்ஸோ குற்றவாளி தற்கொலை:

இதனால் வாகனமும் நிறுத்தப்பட்ட நிலையில், நாராயண ராவ் திடீரென ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விடிய-விடிய நாராயண ராவின் உடலை தேடி இன்று காலை மீட்டனர். சடலமாக மீட்கப்பட்ட ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்ப்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் நாராயண ராவ் தன்னை கண்டித்தவரை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தலித் ஆர்வலர், நீதிபதியின் உத்தரவுக்குப்பின் சிறையில் அடைக்க அழைத்துச்சென்றபோது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.