Shocking Video: மேடையில் நடனமாடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்.!
ஓணம் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய சட்டமன்ற ஊழியர் (Onam Celebration Dance) மயங்கி விழுந்து உயிரிழந்த பதறவைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 02, திருவனந்தபுரம் (Kerala News): தை மாதத்தின் முதல் நாள் தமிழர்களால் அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுவது போல, மலையாள மக்களின் அறுவடை திருவிழாவாக ஓணம் பண்டிகை (Onam Festival 2025) சிறப்பிக்கப்படுகிறது. உலகளவில் வசித்து வரும் மலையாள மொழி பேசும் மக்கள் மன்னர் மகாபலியை வரவேற்கும் பொருட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு கொண்டாட்டத்துடன் தொடரும். இதில் 64 வகையான ஓண சத்யா விருந்து, படகுப்போட்டி, மலர் அலங்கார போட்டிகள் உட்பட பல நடைபெறும்.
ஓணம் கொண்டாட்டத்தில் நடனமாடிய துணை நூலகர் மரணம் :
ஆவணி மாதத்தில் திருவோணம் நட்சத்திரம் நாளில் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 5ஆம் வரை கேரளாவில் 10 நாட்கள் ஓணம் பண்டிகையானது கொண்டாட்டத்துடன் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் ஓணம் பண்டிகையின் கொண்டாட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது நடனமாடிக் கொண்டிருந்த துணை நூலகர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது கோர விபத்து.. டிராக்டர் கவிழ்ந்து பறிபோன 4 உயிர்கள்.!
மயங்கி விழுந்து உயிரிழப்பு :
வயநாட்டில் உள்ள பத்தேரியில் வசித்து வருபவர் வீ. ஜுனைஸ் அப்துல்லா (வயது 46). இவர் சட்டமன்ற துணை நூலகராக பணியாற்றி வரும் நிலையில், சம்பவத்தன்று ஓணம் கொண்டாட்டத்தில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓணம் கொண்டாட்டத்தின் போது சட்டமன்ற ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்த பதறவைக்கும் காட்சிகள் :
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)