செப்டம்பர் 01, ஆந்திர பிரதேசம் (Andhra Pradesh News): கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலங்கள் கடந்த இரண்டு நாட்களாக கலை கட்டியிருந்தன. ஒவ்வொரு கோவில்களிலும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் வழிபாட்டு குழு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னெடுத்திருந்தது.
டிராக்டர் கவிழ்ந்து விபத்து :
அந்த வகையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பல நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. அப்போது டிராக்டர் உட்பட பல்வேறு வாகனங்களில் விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் மேற்கு கோதாவரி மாவட்டம் நர்சபுரம் மண்டலம் பகுதியில் டிராக்டரில் விநாயகர் சிலை ஒன்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இந்த டிராக்டரில் சிறுவர்கள் பலரும் அமர்ந்திருந்த நிலையில், டிராக்டர் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 2 அமைச்சர்கள் டார்ச்சர் பண்றாங்க.. பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா பரபரப்பு வீடியோ.!
பறிபோன உயிர்கள் :
இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த சிறார்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் படுகாயமடைந்த ஒருவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த சிறார்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.