Maharashtra Former Action: கிணறு தோண்ட அனுமதிக்கு ரூ.2 இலட்சம் லஞ்சம் வேண்டும் - அரசு அதிகாரியை பணத்தால் அலறவிட்ட விவசாயி.!
அரசு அலுவலகத்தில் கிணறு தோண்ட அனுமதி கேட்ட விவசாயியிடம் ரூ.2 இலட்சம் அதிகாரி இலஞ்சம் கேட்க, அதனை விவசாயி வித்தியாசமான முறையில் கொடுத்து உலகத்துக்கே அதனை தெரியப்படுத்தினார்.
ஏப்ரல் 01 , சம்பாஜி மகாராஜ் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத், சம்பாஜி நகர் பகுதியில் வசித்து வரும் விவசாயி மங்கேஷ். இவர் விவசாய நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி வேண்டி ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொள்வதாக கூறிய அரசு அதிகாரி, கிணறு தோண்ட அனுமதி வழங்க வேண்டும் என்றால் ரூ.2 இலட்சம் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார். அனுமதிக்காக கிட்டத்தட்ட மாதக்கணக்கில் அலையவிட்டு இலஞ்சம் கேட்டுள்ளார். Indian Family Died: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற நினைத்த ஒட்டுமொத்த இந்திய குடும்பமே பலி.. பதைபதைக்க வைக்கும் சோகம்.!
இதனால் விரக்தியடைந்த விவசாயி மங்கேஷ், தனது கழுத்தில் ரூ.2 இலட்சத்திற்கான ரூபாய் நோட்டுகளை மாலையாய் தைத்து போட்டுகொண்டு, ஊராட்சி அலுவலகம் முன் கோஷமிட்டு பணத்தை வளாகத்தில் வீசியெறிந்தார்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, மாவட்ட நிர்வாகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.