Father Son Suicide: சொத்து பிரச்சனையில் தந்தை-மகன் தூக்கிட்டு தற்கொலை; சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
உறவினர்களுக்கிடையே எழுந்த நிலத்தகராறு காரணமாக தந்தையும்-மகனும் எடுத்த விபரீத முடிவால் நடந்த சோகம் குறித்து விவகாரிகிறது இந்த செய்தித்தொகுப்பு.
செப்டம்பர் 23, பால்கர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம், வசாய் பகுதியில் வசித்து வரும் 55 வயதுடைய முதியவர் எட்வின் டி'சௌசா (Edwin D'Souza). இவருக்கு 25 வயதுடைய குணால் என்ற மகன் இருக்கிறார்.
இந்நிலையில், இருவரும் தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று சோதித்தபோது, தந்தையும்-மகனும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், வீட்டில் முதற்கட்ட சோதனை மேற்கொண்டனர். Two men died in Kumbakonam: அதிக போதை பெற மதுபானத்துடன் சானிடைசர்: கூலித் தொழிலாளிகள் பலி.!
அப்போது, தந்தை-மகன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், "சொத்து தகராறு காரணமாக தாங்கள் விபரீத முடிவை எடுப்பதாக எழுதி வைத்துள்ள இருவரும், சிலரின் பெயரை குறிப்பிட்டு இருக்கின்றனர்".
இதனால் கடிதத்தின்படி இருவரின் மரணத்திற்கு காரணமான நபர்களை காவல் துறையினர் விசாரிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வசாய் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Sep 23, 2023 09:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

