Mazgaon Motorcycle Accident: மும்பையில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து.. சிறுவனின் தந்தை கைது..!

மும்பை மஸ்கான் பகுதியில் சிறுவர் ஒருவர் பைக் மீது மோதியதில் 32 வயது இளைஞர் உயிரிழந்தார்.

Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

மே 24, மஸ்கான் (Mumbai News): சிறிது நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயதுடைய சிறார் ஒருவர் மது போதையில் காரினை ஓட்டி சென்று ஏற்படுத்திய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அந்த பழத்தை இன்னும் சென்று கொண்டிருக்கும் நிலைமையில் அதை போன்று மற்றொரு விபத்து மும்பையில் ஏற்பட்டுள்ளது. Gujarat Cylinder Explosion: குஜராத்தில் சிலிண்டர் வெடிப்பு.. 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!

மும்பை மஸ்கான் பகுதியில் 17 வயதுடைய சிறுவர் ஒருவர் இன்று காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது 32 வயதுடைய இர்பான் நவாப் அலை ஷேக் என்ற நபரின் மீது மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் சிகிச்சைக்காக ஜே ஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறார் பிடித்து டோங்கிரி குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிறுவனின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement