நவம்பர் 20, சிட்னி (World News): ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னி ஹாரன்ஸ்பை பகுதியில் இந்திய வம்சாவளி பெண்மணி மன்விதா தரேஸ்வர் தனது கணவர் மற்றும் 3 வயது வயதுடைய மகனுடன் வசித்து வருகிறார். இவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இவர்கள் மூவரும் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், கார் நிறுத்தும் இடத்தில் நுழைவாயிலை கடந்த போது சொகுசு கார் ஒன்று வேகமாக மன்விதா மீது மோதி இருக்கிறது. Arattai App: இனி உரையாடல்களுக்கு முழு பாதுகாப்பு.. வாட்ஸ்அப்புக்கு சவால் விடும் அரட்டை செயலி.!
8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு:
இந்த சம்பவத்தில் கர்ப்பிணியான அவர் பலத்த காயமடைந்து இருக்கிறார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மன்விதாவின் உயிரிழப்புக்கு காரணமான நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.