5-Year-Old Girl Dies of Heart Attack: தொடரும் மாரடைப்பு சம்பவங்கள்.. 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு..!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், ஐந்து வயது சிறுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

3 children died file pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 23, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமினி (வயது 5). நேற்று சிறுமி அவரது தாயாரின் அருகில், படுத்தபடியே செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது காமினியின் கைகளில் இருந்து திடீரென செல்போன் கீழே விழுந்ததால் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த காமினியின் தாயார் அதிர்ச்சியடைந்தார். India Stock Market: உலக பங்குச்சந்தை தரவரிசை... 4வது இடம் பிடித்த இந்தியா..!

அப்போது எவ்வித அசைவுமின்றி காமினி படுத்திருப்பதை கண்டு அலறியடித்தப்படியே காமினியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். தொடர்ந்து காமினியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியின் மரணத்திற்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement