Gujarat Ambulance Fire Accident (Photo Credit : @dishatelugu X)

நவம்பர் 19, குஜராத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அர்வல்லி மாவட்டம் மோடசா பகுதியில் மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளான குழந்தை நோய் வாய்ப்பட்டு இருக்கிறது. இந்த குழந்தையை அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணி அளவில் அவசர ஊர்தி மூலம் குழந்தை அகமதாபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழியில் மோடசா - தன்சுரா பகுதியில் அவசர ஊர்தி சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!

தீ விபத்தில் பறிபோன உயிர்கள்:

இதனையடுத்து ஆம்புலன்ஸின் பின் பக்கத்தில் தீ பிடித்ததை கவனித்த ஓட்டுனர் வாகனத்தின் வேகத்தை குறைத்து முன் இருக்கையில் இருந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களை விரைந்து வெளியே இறக்கி உள்ளார். ஆனால் பின்புறத்தில் இருந்த குழந்தையின் உறவினர்கள் உட்பட மருத்துவர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் குழந்தையின் தந்தை ஜிக்னேஷ் மோச்சி (வயது 38), மருத்துவர் சாந்திலால் (வயது 30), செவிலியர் பூரிபென் (வயது 23) ஆகியோர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை:

குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ சிகிச்சைக்காக சென்றபோது நடந்த இந்த சோகம் அப்பகுதியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவசர ஊர்தி தீப்பற்றி 4 பேர் பலி: