5-Year-Old Girl Dies of Heart Attack: அதிர்ச்சி... சரிந்து விழுந்த 5 வயது சிறுமி.. மாரடைப்பால் பலியான சோகம்!

தெலங்கானா மாநிலத்தில் 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ukulu (Photo Credit @backiya28 X)

அக்டோபர் 16, கரீம்நகர் (Telangana News): தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மாவட்டம் ஜம்மிகுண்டாவைச் சேர்ந்த ராஜு மற்றும் ஜமுனா தம்பதியரின் மகள் (வயது 5). நேற்று சிறுமி திடீரென விழுந்து மயக்கமடைந்தார். எவ்வித அசைவுமின்றி சிறுமி படுத்திருப்பதை கண்டு அலறியடித்தப்படியே அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 8-Year-Old Girl Rescued: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது குழந்தை.. 16 கி.மீ. தேடி மீட்ட காவலர்களுக்கு குவியும் பாராட்டு..!

சிறுமியின் மரணத்திற்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பே (Heart Attack) காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிக்கு பிறந்தது முதலே இதயம் தொடர்பான பிரச்னை இருந்திருக்கலாம் எனவும், அதனை முறையாக அடையாளம் காணாமல் இருந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement