8-Year-Old Girl Rescued (Photo Credit: @upcopsachin X)

அக்டோபர் 16, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லலித்பூர் தடத்தில் சமீபத்தில் தந்தையுடன் ரயிலில் பயணம் செய்த 8 வயது பெண் குழந்தை எமர்ஜென்சி ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்துவிட்டது. இதனையடுத்து, உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு அந்த குழந்தையின் தந்தை தகவல் தெரிவித்தார். Ratan Tata's Pet Dog 'Goa': ரத்தன் டாடாவின் செல்ல நாய் 'கோவா' இறந்துவிட்டதா? உண்மை செய்தி என்ன..?

இதனைத்தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு, அங்கு உள்ளூர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் ரயில்வே காவல்துறையினர் தண்டவாளத்தின் வழியே தேடிச் சென்றனர். மேலும், அந்த ரயில் தடத்தில் வரவிருந்த ரயில்களும் நிறுத்தப்பட்டன. சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று பெண் குழந்தையைத் தேடினர். அப்போது, தண்டவாளத்தின் அருகே பெண் குழந்தை விழுந்து கிடந்ததைக் கண்ட காவல்துறையினர் அந்தக் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

சுமார் 16 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று குழந்தையை காப்பாற்றிய ஜான்ஸி, லலித்பூர் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவலர்களுக்கு குழந்தையின் தந்தை நன்றி தெரிவித்தார். காயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குழந்தையை மீட்டு காவலர் ஒருவர் அழைத்துவரும் வீடியோவை சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த பலரும் காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

8 வயது பெண் குழந்தையை பத்திரமாக மீட்ட காவல்துறையினர்: