Young Woman Sexual Harassment: நடைபயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சிசிடிவி காட்சிகள் வைரல்..!
பெங்களூருவில் காலை நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 05, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காலை நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணுக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
கடந்த ஆகஸ்ட் 02-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், இளம்பெண் ஒருவர் காலையில் நடைபயிற்சிக்கு செல்வதற்காக வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், அந்த இளம்பெண்ணிடம் நெருங்கி வந்துள்ளார். இதனால் அவர் சற்று முன்னோக்கி நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து துரத்தி வந்த வாலிபரை கண்டு அந்த இளம்பெண் ஓடி சென்றார். அவரை வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து, அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் (Sexual Abuse) ஈடுபட்டுள்ளார். First Informers Of Landslide In Wayanad Dies: வயநாடு கடும் நிலச்சரிவு; முதலில் தகவல் அளித்த பெண் ஊழியர் பலி.. ஆடியோ வைரல்..!
பின்னர், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து, அந்த இளம்பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.