ஆகஸ்ட் 05, வயநாடு (Kerala News): கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30-ஆம் தேதி பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் (Wayanad Landslide) சிக்கி, சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டதால், அங்கு வசித்து வந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. இதுவரை சுமார் 385 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து 7-வது நாளாக மீட்புப் பணிகள் நீடித்து வருகின்றன. Hostel Warden Brutally Attacks Girl Students: வார்டனா அது? ராட்சசி போல மாணவிகளை துன்புறுத்திய கொடூரம்; பெற்றோர்கள் குமுறல்.!
இந்நிலையில், வயநாட்டில் அதிகாலை 1.30 மணிக்கு முதல் நிலச்சரிவு ஏற்பட்ட போது, உதவி கேட்டு தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் நீத்து ஜோஜோ (Neethu Jojo) என்பவர் அழைப்பு விடுத்த செல்போன் ஆடியோ தற்போது வைரலாகி வருகின்றது. மேப்பாடி மலைப்பகுதியைச் சேர்ந்த அவர், தான் பணியாற்றும் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, தனது கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதில், தனது வீட்டின் உள்ளே தண்ணீர் புகுந்து விட்டதாகவும், தான் இப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அருகில் உள்ள 6 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டதாகவும் கூறி, தயவு செய்து எங்களை காப்பாற்ற உடனடியாக உதவிக்கு ஆட்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்ஸுடன் மீட்பு குழுவினரை அனுப்பி வைத்தது. ஆனால், சூரல்மலையை இணைக்கும் பாலம் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால், அவருக்கு உடனடியாக காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக நீத்து ஜோஜோ பணியாற்றிய மருத்துவமனையின் மருத்துவர் ஷானவாஸ் பல்லியால் கூறுகையில், 'நிலச்சரிவு ஏற்பட்டவுடன் நீத்து ஜோஜோ தான் முதலில் தகவல் அளித்தார். அவர் மிகவும் பதற்றத்துடன் பேசினார். அவருக்கு உதவுவதற்காக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸுடன் மீட்பு குழுவினரை உடன் அனுப்பி வைத்தோம். தொடர்ந்து செல்போனில் தொடர்பில் இருந்த அவரை, 2-வது நிலச்சரிவுக்குப் பின்னால் எங்களால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை' எனக் கூறினார்.