Former Model Divya Pahuja Killed: முன்னாள் மாடல் திவ்யா பகுஜா கொலை... மூன்று பேர் கைது..!

ஹரியானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் முன்னாள் மாடல் திவ்யா பகுஜா கொலை செய்யப்பட்டுள்ளார்.

Former Model Divya Pahuja Killed: முன்னாள் மாடல் திவ்யா பகுஜா கொலை... மூன்று பேர் கைது..!
Divya Pahuja Killed (Photo Credit: @nabilajamal_ X)

ஜனவரி 03, ஹரியானா (Haryana): ஹரியானா மாநில குர்கான் மாவட்டத்தில், பெண் ஒருவரின் உடல் இறந்த நிலையில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அந்த பெண் முன்னாள் மாடல் திவ்யா பகுஜா (Divya Pahuja) என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ECR Beach Dead: 4 நாட்களில் 10 பேர் பலி... கடலில் குளிக்க தடை..!

முன்னாள் மாடல் திவ்யா பகுஜா கொலை: திவ்யா ஹரியானா மாநில குர்கான் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார். அப்போது தான், அந்த ஹோட்டலின் உரிமையாளர் அபிஜித் சிங் என்பவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக பிரகாஷ் மற்றும் இந்த்ராஜ் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அந்த ஓட்டலில் பணிபுரிபவர்கள். திவ்யாவின் உடலை எடுத்து செல்ல உதவினால் பத்து லட்சம் தருவதாக கூறி இந்த கொலையில் அவர்களை சேர்த்துள்ளார் அபிஜித்.

மூன்று பேர் கைது: மேலும் திவ்யாவை கொலை செய்த உடன் அவரின் உடலை அவர்கள் தூக்கி கொண்டு சென்றுள்ளனர். அந்த வீடியோ ஹோட்டல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் திவ்யாவின் உடலை அவர்கள் பிஎம்டபிள்யூ காரில் எடுத்து சென்றுள்ளனர். இந்த சிசிடிவி கேமரா பதிவின் மூலம் சிக்கிய இந்த மூவரையும், காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை... உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!

திவ்யா பகுஜா முன்னாள் மாடல் ஆவார். மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய பெயரில் நடந்த என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட ரவுடி சந்தீப் கடோலின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திவ்யா, பெயிலில் வெளியே வந்ததும் குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Jan 03, 2024 07:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).