ECR Beach Dead (Photo Credit: @Chocki_Girl X & Pixabay)

ஜனவரி 03, சென்னை (Chennai): சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் குப்பம், நைனார் குப்பம், கானத்தூர் குப்பம், கரிகாட்டு குப்பம் ஆகிய நான்கு குப்பங்களை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் வெளியூரில் இருந்து வரும் நபர்கள் கடலின் ஆழம் தெரியாமல் குளிக்கும் போது கடல் அலையில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி மாலை ஸ்நேகா கார்டனில் உள்ள கடற்கரையில் 9 பேர் குளிக்க சென்றதில் 5 பேர் கடல் அலையில் சிக்கி மூழ்கியுள்ளனர். அதில் ஒருபெண்ணை மட்டும் உயிருடன் மீட்டனர். மற்ற நான்கு பேர் உயிரிழந்தனர். Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை... உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!

கடலில் குளிக்க தடை: தொடர்ந்து புத்தாண்டு அன்று அதிகாலை 5 மணியளவில் விஜிபி அவுட் கடற்கரையில் குளிக்கும் போது இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை ஆகிய பகுதிகளில் குளித்த நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் கடந்த 4 நாட்களில் மட்டும் 10 பேர் பலி ஆகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட கடற்கரை பகுதியில் தடையை மீறி குளிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.