ஜனவரி 03, சென்னை (Chennai): லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் நெகட்டிவ் கமெண்ட்களை எல்லாம் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 600 கோடி வரை வசூலித்தது. IND vs SA 2nd Test: 55 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா... இந்தியா வரலாற்று சாதனை..!
உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இந்நிலையில் மதுரையை சார்ந்த ராஜமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளார். அதில், "திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, நடிகர் விஜய் நடித்த லியோ படம் கடந்தாண்டு. இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகளுடன் வன்முறையில் ஈடுபடுவது, வீட்டில் துப்பாக்கி தயாரிப்பது போன்ற காட்சிகள் உள்ளன.
மதங்கள் தொடர்பான முரண்பாடான கருத்துக்கள், எதிரிகளை பழிவாங்குவது, பெண்கள், குழந்தைகளை கொலை செய்வது, போதைப் பொருள் பயன்படுத்துவது, மனிதர்களை துன்புறுத்துவது உள்ளிட்ட பல்வேறு பார்க்க தகாத காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. இந்த வன்முறை காட்சிகளை பார்க்கும் இளம் சிறார்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளது. HC On Removal Of Uterus and Divorce Plea: "மனைவியின் கருப்பையை அகற்றியது கணவனுக்கு செய்த கொடுமை ஆகாது": விவாகரத்து வழக்கை ரத்து செய்தது சென்னை நீதிமன்றம்.!
லியோ படத்தில் பொழுதுபோக்கு அம்சம் இல்லை. தணிக்கை துறை இதுபோன்ற படங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். லியோ படத்தில் வன்முறை தூண்டும் காட்சிகளை வைத்ததற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். லியோ படம் எந்த தளத்திலும் இல்லாதவாறு தடை விதிக்க வேண்டும். அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.