Reels Video Tragedy: அதிவேகத்தில் காரில் உற்சாக பயணம்; ரீல்ஸ் வீடியோ எடுத்து நண்பர்கள் இருவர் பலி., 3 பேர் படுகாயம்.!

ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி காரில் பயணம் செய்த நண்பர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், இருவர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். எஞ்சிய மூவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Delhi Rohini Highway Accident (Photo Credit: @RealStoryofUP X)

மே 13, டெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள ரோகினி, பேகம்பூர் கிராமத்தில் (Delhi Rohini Area Car Accident 2 Youth Died) வசித்து வருபவர்கள் சஞ்சய் (23), அசுதேஷ் (22), சாஹில் (20), ரஷீத் (18), லோகேஷ் சிங் (23). இவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். சம்பவத்தன்று இவர்கள் அனைவரும் ரோகினி தேசிய நெடுஞ்சாலையில் காரில் அதிவேகமாக பயணம் செய்துள்ளனர். காரில் இருந்த நண்பர்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் ரீல்ஸ் வீடியோ தயாரித்துக்கொண்டு இருந்ததாகவும் தெரியவருகிறது.

தறிகெட்ட இயக்கத்தால் விபத்தில் சிக்கிய கார்: அச்சமயம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு இயங்கி விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 நண்பர்களில் சஞ்சய் மற்றும் அசுதேஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சாஹில், ரஷீத், லோகேஷ் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு அலறித்துடித்தனர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். Allu Arjun Casting His Vote: இந்தியத் தேர்தல்கள் 2024: ஜனநாயக கடமையாற்றி வாக்காளர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கிய அல்லு அர்ஜுன்.! 

இருவர் பலி உறுதி: காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சஞ்சய் மற்றும் அசுதேஷின் மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பிற அனைவர்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அமன் விஹார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து தொடர் விசாரணை: அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் இளைஞர்கள் ரீல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டதும், அதனால் வாகனத்தை வேகமாக இயக்கி பின் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. எனினும், கார் எப்படி விபத்துக்குள்ளானது என்ற உறுதியான தகவல் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இளைஞர்களின் செல்போனும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement