மே 13, ஹைதராபாத் (Cinema News): இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த 2024 மக்களவைத் தேர்தல்கள் (General Elections 2024) மூன்று கட்டத்தை நிறைவு செய்துள்ளது. எஞ்சிய 4 கட்டத்தில், இன்று (மே 13, 2024) நான்காம்கட்ட (Phase 4 Elections 2024) தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதலாகவே மக்கள் பலரும் வாக்குச்சாவடி மையங்களில் திரண்டு தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நான்காம் கட்ட தேர்தலை பொறுத்தமட்டில் ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradesh Assembly Elections 2024) மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேவேளையில், தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 96 மக்களவை (Lok Shaba Elections 2024) தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் முடிவுகள் அனைத்தும் ஒரேகட்டமாக ஜூன் மாதம் 04 ம் தேதி வெளியாகிறது. Royal Enfield Explodes: திடீரென வெடித்துசிதறிய ராயல் என்பீல்டு பைக்; 10 பேர் படுகாயம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! 

வாக்காளர்களுக்கு வேண்டுகோள் வைத்த அல்லு அர்ஜுன் (Allu Arjun): இந்த தேர்தலில் மொத்தமாக 1717 போட்டியாளர்கள் மக்களின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். 19 இலட்சம் தேர்தல் அதிகாரிகள், 1.92 இலட்சம் வாக்குப்பதிவு மையங்கள் இத்தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 17.70 கோடி வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தவுள்ளனர். இவர்களில் 8.73 கோடி பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். இன்று இந்தியத் தேர்தல்கள் 2024 ஐ முன்னிட்டு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்குகளை மக்களோடு மக்களாக, எளிமையான முறையில் வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்திய நடிகர் அல்லு அர்ஜுன்,"அனைவரும் தயைகூர்ந்து உங்களின் வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும். இந்த நாள் நமக்கு மிகவும் பொறுப்பான நாள் ஆகும். அரசியல்களம் தேர்தலாலும், நிலம் வெயிலினாலும் சூடாக இருக்கிறது எனபதை நாம் அறிவோம். ஆனால், இந்த சிறிய முயற்சி, நாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவை என்பதால் அதனை தவறாது செய்வோம்" என கூறினார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படத்திற்கு பின் இந்திய அளவில் உயரிய நட்சத்திரமாக உயர்ந்த அல்லு அர்ஜுனின் புஷ்பா (Pushpa Part 2) படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.