Bus Rammed into Milk Container: பால் ஏற்றிவந்த லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து; 18 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!

லக்னோ - ஆக்ரா விரைவுச்சாலையில் பயணம் செய்த லாரி - பேருந்து மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 18 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. 30 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Bus Rammed into Milk Container: பால் ஏற்றிவந்த லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து; 18 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!
Unnao Accident (Photo Credit: @pressmanchandan X)

ஜூலை 10, உன்னாவ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் (Unnao Bus Rammed into Milk Container) மாவட்டம், பெஹதா முஜாவர் காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் லக்னோ - ஆக்ரா விரைவுச்சாலையில் (Lucknow Agra Expressway), பேருந்து - பால் கண்டைனர் லாரி மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 18 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. Earthquake in Maharashtra: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவு.! 

இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்டு பயங்கரம்:

தனியார் சொகுசு பேருந்து பால் கண்டைனர் மீது நேரடியாக பின்னால் இருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 18 பேர் பலியான நிலையில், 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சையாக சி.எச்.சி பங்கர்மாவ் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். Assam Flood: முக்கிய நதிகளில் வெள்ளம்.. வரலாறு காணாத கனமழையால் மூழ்கிய அசாம்..!

களநிலவரங்கள் காத்திருக்கின்றன:

விபத்து தொடர்பாக தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், உரிய சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).