ஜூலை 09, அசாம் (Assam News): இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழையானது எப்போதும் ஜூன் மாத கடைசியில் தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து பல இடங்களில் கன மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கனமழை காரணமாக அசாமில் 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருப்பதால் பல மாவட்டங்கள் இருளில் மூழ்கியுள்ளன. PM Modi Russia Visit: ரஷியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி; உற்சாக வரவேற்பு கொடுத்த அதிபர் விளாடிமிர் புதின்.!
அசாம் வெள்ளம்: இதனால் 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகள் என எட்டு ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பல இடங்களில் மக்களின் வீடுகள் மூழ்கியுள்ளதால் தங்க இடமின்றி பலர் தவித்து வருகின்றனர். பொதுமக்கள் மட்டும் இன்றி வனவிலங்குகளும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் என அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#Watch | Flood situation in Assam's Nalbari remains grim as water level rises following incessant rainfall. Nearly 4.89 lakh people in 19 districts affected | reported by news agency ANI pic.twitter.com/5CUw7dQ8iJ
— NDTV (@ndtv) June 25, 2023