Drunken Drive Car Accident: அதிவேகமாக வந்த கார் நடைபாதையில் இருந்தவர்கள் மீது ஏறி 2 பேர் பலி..! 5 பேர் படுகாயம்..!

மகாராஷ்டிராவில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் இருந்த தொழிலாளர்கள் மீது ஏறி ஏற்பட்ட படுபயங்கரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nagpur Drunken Drive Car Accident (Photo Credit: @policekaka X)

ஜூன் 17, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள வதோடா காவல்நிலைய பகுதியில் உள்ள திகோரி செளக்கில், நேற்று இரவு (ஜூன் 16) நள்ளிரவு 12 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது அதிபயங்கரமாக அவர்களின் மீது ஏறி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். Young Woman Sexual Harassment: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது ..!

இச்சம்பவம் பற்றி தகவலறிந்து சென்ற வதோடா காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும், 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

பின்னர், இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குடிபோதையில் காரை (Drunken Drive) ஓட்டிச்சென்று விபத்திற்கு காரணமான, பூஷன் லஞ்சேவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இதன் எதிரொலியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement