![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1715938346Sexual%2520Harassment%2520File%2520Pic-380x214.png)
ஜூன் 17, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள ஆதம்பாக்கம், பாரத் நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 44). இவருக்கு சொந்தமான வீடு, போரூர் அருகே சேக்மான்யம் அலங்கார் தெருவில் உள்ளது. அந்த வீட்டில் 35 இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். Roof Collapse Accident: வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து வாலிபர் படுகாயம்..!
இந்நிலையில், அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, சங்கர் வீட்டிற்கு சென்று அவருக்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) அளித்துள்ளார். இதனால், அந்த இளம்பெண் சத்தமிட்டு கத்தி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடி வந்துள்ளனர். அப்போது, இவர் அந்த இளம்பெண்ணை மிரட்டி இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பின்னர், இதுதொடர்பாக மதுரவாயில் காவல்நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சங்கரை கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.