Jharkhand Election Campaign: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரம்.. பிரதமர் மோடி பேச்சு..!
ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக பாஜக முழு முயற்சியுடன் செயல்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நவம்பர் 04, ஜார்க்கண்ட் (Jharkhand News): ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவை தேர்தல் வருகின்ற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) பிரச்சாரத்தில் பேசியுள்ளார். அதில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக முழு முயற்சியையும் நேர்மையாக செய்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். WhatsApp Group For Hindu IAS Officers: இந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான வாட்ஸ்அப் குழு.. வெடித்த சர்ச்சை.!
இளைஞர்களின் திறன்களை அதிகரிப்பது, வேலை வாய்ப்புகளை வழங்குவது அரசின் பொறுப்பு. ஜார்க்கண்டின் வசதி, பாதுகாப்பு, செழிப்பு போன்ற உத்தரவாதத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சேர்ப்பில் முறைகேடு, வினாத்தாள் கசிவு போன்றவை வாடிக்கையாகிவிட்டது. எனவே, பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.