PM Modi on Budget 2025: "ஏழைகளின் வாழ்க்கை செழிக்க மகாலட்சுமியை வேண்டுகிறேன்" - பிரதமர் நரேந்திர மோடி..!

2025 - 2026 பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையி, இன்று குடியரசு தலைவர் உரையுடன் மக்களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.

PM Modi on Budget 2025:
PM Narendra Modi (Photo Credit; @ANI X)

ஜனவரி 31, புதுடெல்லி (New Delhi): ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி 01, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2025-ஐ முன்னிட்டு, இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒருங்கிணைந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார். நாளை நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தனது 8 வது பட்ஜெட் உரையை மக்களவையில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் 2025 - 2026 இந்திய மக்களின் எதிர்பார்ப்பை ஏற்புத்தியுள்ள பட்ஜெட் என்பதால், உலகளவிலும் கவனிக்கப்படும். Budget 2025: நீண்ட எதிர்பார்ப்புடன் பட்ஜெட் 2025: தேதி & நேரம் எப்போது? அரசின் திட்டம் என்ன? விபரம் உள்ளே.! 

2047 ல் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கு:

இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, "2025ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிவப்பாக நடைபெற மகா லட்சுமியை நான் பிரார்த்திக்கிறேன். ஏழைகளின் வாழ்க்கையில் செழிப்பு கிடைக்க மகாலட்சுமியை நான் வணங்கி பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மறுசீரமைப்பு, செயல்பாடு, மாற்றம் என்கிற உன்னத நோக்கத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. Budget 2025 Income Tax Relief: 2025 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுபவை.. வருமான வரியில் அதிரடி மாற்றங்கள் எதிர்பார்ப்பு..! 

இளைஞர்களுக்கான பட்ஜெட்:

2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட், ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்க்கையிலும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். புதுமையான விஷயங்கள், ஒருங்கிணைந்து செயல்படுவது, முதலீடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நமது அரசு செயல்படுகிறது. இந்த பட்ஜெட் வளர்ந்த இந்தியாவுக்கான பட்ஜெட்டாக இருக்கும். 2017 ல் வளர்ந்த இந்தியா என்பதே நமது அரசின் இலக்கு. இந்தியாவின் வளர்ச்சி என்ற இலக்கை முன்வைத்து அரசு முன்னேற்றங்களை செயல்படுத்துகிறது. இந்த பட்ஜெட் இளைஞர்களுக்கானதாக இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது:

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).