Nirmala Sitharaman Union Budget 2025 (Photo Credit: @nsitharaman X)

ஜனவரி 27, புதுடெல்லி (New Delhi): கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய ஆட்சிப்பொறுப்பை கையில் வைத்துள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசில், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர், தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவில் ஒரே அரசு ஆட்சியில் நீடித்து வருகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை எதிர்பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் வரி திருத்தும், குறைந்த ஜிஎஸ்டி விகிதம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தொழில்நுட்ப நிறுவனங்களும், தனிநபர்களும் எதிர்பார்க்கின்றனர்.

பட்ஜெட் 2025:

நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தனது 8 வந்து பட்ஜெட் உரையை பிப்ரவரி மாதம் 01, 2025 அன்று வெளியிடவிருக்கிறார். இந்தியாவில் வரி செலுத்தும் நபர்கள், கார்ப்பரேட் இந்தியா வரி சீர்திருத்தம், ஜிஎஸ்டி விகிதம், யூனியன் பட்ஜெட் 2025 - 2026 தொகை ஒதுக்கீடு உட்பட பல்வேறு விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், தற்போதைய பொருளாதார நிலைமைகளுக்கு இடையே, மக்களுக்கான சில நிவாரண அறிவிப்புகள் வெளியாகும் எனவும், வரி செலுத்தும் நபர்களின் நலனை கருத்தில் கொண்டு, அது சார்ந்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Gold Silver Price: சற்று ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு.! 

பட்ஜெட் 2025 தேதி நேரம் (Budget 2025 Date Time in Tami):

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31, 2025 அன்று முதல் பிப்ரவரி 13, 2025 வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற அவையின் இரண்டாவது கூட்டத்தொடர் மார்ச் மாதம் 10ம் தேதி முதல் ஏப்ரல் 04 வரை நடைபெறுகிறது. வரி செலுத்துவோர், தொழில்நுட்பம், சுகாதாரம், காப்பீடு, நிதித்துறை, வேலைவாய்ப்பு, நுகர்வோர் பயன்பாடுகளை அதிகரித்தல் உட்பட பல்வேறு விஷயங்களில் பட்ஜெட் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி 3.0 எனப்படும் அடைமொழியில், இரண்டாவது ஆண்டு பட்ஜெட் என்பதால், எதிர்பார்புகம் அதிகரித்துள்ளன. பிப்ரவரி 01, 2025 அன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள் (Budget 2025 Expectations in Tamil):

பொது சுகாதார உட்கட்டமைப்புக்கு கூடுதல் நிதி, கிராமப்புற சுகாதாரத்தை ஊக்குவித்தல், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், இறக்குமதியை ஒழுங்குபடுத்தல், சுகாதார, காப்பீடு தடுப்பு நடவடிக்கைகள், உயரி தொழில்நுட்பம் மருந்து துறை ஆராய்ச்சி மேம்பாடு நிதி, பசுமை உட்கட்டமைப்பு, நகர்ப்புற வீடுகளுக்கான பட்ஜெட் மறுபரிசீலனை, டிஜிட்டல் மயமாக்கல், தொழில்நுட்ப விஷயங்களை முன்னெடுத்தல், காப்பீடு பிரீமியம், 80டி விளக்கு வரம்பு தனிநபர்களுக்கு ரூ.50,000 உயர்தல், மூத்த குடிமக்களுக்கானது ரூ.1,00,000 உயர்த்துதல், ஆயுள் காப்பீடு தனி வரிச்சலுகை, சேமிப்பு கணக்குகளுக்கு பங்களிப்பு, கார்ப்பரேட் டிடிஎஸ், தேவையில்லாத டிடிஎஸ் விதிகள் மறுசீரமைப்பு, டிடிஎஸ் சான்றிதழை எளிதாக்குதல், பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள், பெண்களுக்கான நிதித்திட்டங்களில் வரிச்சலுகை, எரிசக்தி கழிவு மேலாண்மை, உணவு & தங்கும் விடுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்துதல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முன்னுரிமை, அறிவுசார் சொத்து பாதுகாப்பு, இளைஞர்களை மேம்படுத்த நிதி ஆதாரங்களை மேம்படுத்துதல், ஏஐ & இயந்திர கற்றல் முன்னேற்றம், பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது, ஸ்டார்ட்டப் நிறுவனங்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சி, வளர்ச்சி, திறன்மேம்பாடு தொழில்நுட்பங்களுக்கு ஊக்குத்தொகை, வணிக வருவாயை உறுதி செய்தல், தயாரிப்பு நிறுவனங்களை மேம்படுத்துதல், புதிய நிறுவனங்களை உருவாக்குதல், இணைய இணைப்பை நாடு முழுவதும் உறுதி செய்யுதல், உலகத்தரம் வாய்ந்த வங்கி தொழில்நுட்பங்கள் மேம்படுத்துதல், புதிய வரி விதிப்பு மாற்றங்கள் போன்றவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.