ஜனவரி 27, புதுடெல்லி (New Delhi): பிப்ரவரி முதல் நாளில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டில் பல மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பட்ஜெட் தாக்குதல் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் எதிர்பார்க்கும் சில வரி விலக்கு வரம்பு உயர்வுகள், வேலைவாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரியில் மாற்றம் (Income Tax Relief):
பட்ஜெட்டில் வருமான வரி சட்டத்தின் கீழ் மக்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு ஸ்டாண்டர்ட் டிடக்சன் எனும் நிலையான கழிவின் வரம்பு மாற்றப்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு நிலையான விலக்கு வரம்பு ரூ.50000 லிருந்து ரூ.75000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அது ரூ.75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட இருக்கிறது. அப்படி உயர்த்தினால், இந்த லட்சம் ரூபாய் தவிர்த்து தான், மற்றவை வருமான வரி வரம்புக்குள் வரும். அதாவது ரூ. 7 லட்சம் மற்றும் ரூ.8 லட்சத்திற்குள்ள ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு பலன் தரக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும். எனவே புதிய வருமான வரி திட்டத்தில் நிலையான விலக்கு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. Fire Accident: ஓடும் காரில் பற்றி எரிந்த தீ; கூட்டுறவு வங்கி மேலாளர் உடல் கருகி பலி..!
தற்போது வருமான வரிச் சட்டத்தின் 24b பிரிவு வீடு வாங்குபவர்கள், வீட்டுக் கடனுக்கான வருடாந்திர வட்டி கட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்கிற்கு அனுமதிக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த வரம்பை ரூ.5 லட்சமாக அரசு உயர்த்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வீடு வாங்குபவர்கள் வருமான வரி, பிரிவு 80C இன் கீழ் வீட்டுக் கடனுக்காக செலுத்தப்பட்ட அசல் தொகைக்கு ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கிறது. இந்த வரம்பு ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.