Rajasthan Car Crash: கார் - லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாப பலி: தேசிய நெடுஞ்சாலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்.!

சாலைகளில் பயணம் செய்யும்போது ஒவ்வொருவரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதைப்போல, பிறரின் பாதுகாப்பையும் கருதி வாகனங்களை மிதவேகத்தில் இயக்க வேண்டும். அதிக வேகம் எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

Visual from Video (Photo Credit: @PTI X)

டிசம்பர் 11, பிகானோர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானோர் மாவட்டம், ஸ்ரீதுங்கர்கர் கலுபாஸ் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி நாராயணன். இவரது மகன் ராமச்சந்திரா. உறவினர்கள் ராஜு மாலி, ரமேஷ் மாலி, பன்வர்லால் புரோஹித் ஹரிராம்.

தொழில் விஷயமாக சென்று வந்தவர்களுக்கு சோகம்: இவர்கள் அனைவரும் நேற்று தொழில் விஷயமாக வெளியூர் சென்றதாக தெரிய வருகிறது. பின்னர் அனைவரும் பிக்கப் கார் ஒன்றில், ஸ்ரீதுங்கர்கர் நோக்கி வந்துகொண்டு இருந்தனர். அம்மாவட்டத்திலேயே உள்ள சட்லோரா கிராமத்திற்கு அருகே வாகனம் வந்துள்ளது. Italy Train Crash: பயணிகள் இரயில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 17 பேர் படுகாயம்.. மீட்புப்பணிகள் தீவிரம்.! 

கார் - லாரி மோதி விபத்து: அச்சமயம், தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார்.

காவல்துறையினர் விசாரணை: இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீதுங்கர்கர் காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவலின் பேரில், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளிலும் ஈடுபட்டனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement