Software Engineer Dies: கணேஷ் பந்தலில் நடனமாடிய மென்பொறியாளர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

ஐதராபாத்தில் கணேஷ் பந்தலில் நடந்த ஏலத்தில் லட்டுவை ஏலம் எடுத்த சில மணி நேரங்களிலேயே மென்பொறியாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Software Engineer Dies: கணேஷ் பந்தலில் நடனமாடிய மென்பொறியாளர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!
Software Engineer Dies (Photo Credit: @ArbaazTheGreat1 X)

செப்டம்பர் 17, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், மணிகொண்டாவில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 15) கணேஷ் பந்தலில் (Ganesh Pandal) நடந்த ஏலத்தில் லட்டுவை ஏலம் எடுத்த சில மணி நேரங்களிலேயே மென்பொறியாளர் ஒருவர் மாரடைப்பால் (Heart Attack) பரிதாபமாக உயிரிழந்தார். மென்பொறியாளரான (Software Engineer) ஷியாம் பிரசாத் அல்காபுரி டவுன்ஷிப்பில் (Alkapur Township) வசித்து வருகிறார். இவர், கணேஷ் பந்தலில் ரூ.15 லட்சத்துக்கு லட்டுவை ஏலம் எடுத்துள்ளார். இதனால், மகிழ்ச்சியடைந்த அவர் கணேஷ் பந்தலில் சிறிதுநேரம் நடனமாடிவிட்டு, பின்னர் வீட்டுக்குச் சென்றார். வீட்டிற்கு வந்த சற்று நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். Amit Shah on 100 days of Modi 3.0: "பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக 140 கோடி இந்தியர்கள் பிரார்த்தனை" - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

இதனைக் கவனித்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 17, 2024 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).