செப்டம்பர் 17, புதுடெல்லி (New Delhi): பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), தனது 74-ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் 3-ஆவது பதவிக்காலத்தின் முதல் நூறு நாள் சாதனைகள் அடங்கிய புத்தக தொகுப்பை அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் வெளியிட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Union Home Minister Amit Shah) கூறியதாவது, "பிரதமர் மோடியின் பிறந்த நாளை பல்வேறு நிறுவனங்கள் ‘சேவை பக்வடா’என்று கொண்டாட முடிவு செய்துள்ளன. பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, அக்டோபர் 2-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு பாஜகவினர் உதவுவார்கள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராகயிருக்கிறார். உலகின் 15 வெவ்வேறு நாடுகள் தங்கள் நாடுகளின் உயரிய மரியாதையை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளன. அவரது நீண்ட ஆயுளுக்காக 140 கோடி இந்தியர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். Delhi New CM Atishi: ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லியின் புதிய முதல்வர் ஆன அதிஷி..!
இந்தியாவின் ஏழைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக 10 ஆண்டுகளை அர்ப்பணித்த பின்பு, இந்திய மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளனர். இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாறு நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, நாட்டின் உள் மற்றும் வெளி பாதுகாப்பினை பலப்படுத்தி வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. பிராந்திய மொழிகளுக்கு மதிப்பளிக்கும், நமது பழைய கல்வி முறைகளை உள்ளடக்கிய புதிய கல்விக் கொள்கையை மோடி வழங்கியுள்ளார்.
உலகின் உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது. நாங்கள் பொருளாதாரத்தின் 13 அளவுகோள்களில் வளர்ச்சியைக் கொண்டுவந்தோம். விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என உலகம் கூறுகிறது. சுதந்திரத்துக்கு பின்பு, தனது வெளியுறவுக் கொள்கையில் உறுதியுடன் உள்ள ஒரு இந்திய அரசை உலகம் பார்த்திருக்கிறது. 60 கோடி இந்தியர்களுக்கு, வீடுகள், கழிப்பறைகள், எரிவாயு, குடிநீர், மின்சாரம், 5 கிலோ ரேஷன் அரசி மற்றும் 5 லட்சம் வரையிலான சுகாதார வசதிகள் வழங்கப்படுகின்றன. அடுத்தத் தேர்தலுக்குள் இந்தியாவில் சொந்த வீடு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்பதே எங்களின் இலக்கு" என்று அமித் ஷா தெரிவித்தார்.