Daughter in Law Murder: டீ கொடுக்காத ஆத்திரத்தில் மருமகள் கழுத்து நெரித்து கொலை; மாமியார் கைது.. அதிர்ச்சி சம்பவம்..!

ஐதராபாத்தில் டீ தராத மருமகளை, ஆத்திரத்தில் மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Daughter in law murder (Photo Credit: @TeluguScribe X)

ஜூன் 27, ஐதராபாத் (Telangana News): ஐதராபாத்தில் டீ கொடுக்காத ஆத்திரத்தில் மருமகளை பெண் ஒருவர் கொன்றுள்ளார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள அத்தாபூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹாசன் நகரில் இன்று (ஜூன் 27) இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. Military Man Arrested: திருமண ஆசை வார்த்தைக் கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்; ராணுவ வீரர் கைது..!

ஹாசன் நகரை சேர்ந்த ஃபர்சானா தனது மருமகள் அஜ்மிரா பேகத்தை (வயது 28) இன்று காலை தேநீர் தயாரித்து கொடுக்க சொன்னார். அஜ்மிரா இதற்கு மறுத்ததால், கோபமடைந்த ஃபர்சானா, தாவணியால் கழுத்தை நெரித்து (Murder By Strangulation) கொடூரமாக கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து, ஃபர்சானாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement