Aadhar Card Update: பெற்றோர்களே இதை பண்ணிட்டிங்களா?.. ஆதார் குறித்த அரசின் முக்கிய அறிவிப்பு.!

7 வயதை தாண்டிய குழந்தைகளின் ஆதார் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என இந்திய ஆதார் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Baby / Aadhar Card (Photo Credit @Latestly X)

ஜூலை 16, புதுடெல்லி (New Delhi News): குழந்தைகளின் ஆதார் தகவல்களை பெற்றோர்கள் புதுப்பிக்க வேண்டும் என இந்திய ஆதார் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகிய விபரங்கள் வைத்து முதலில் ஆதார் வழங்கப்படுகிறது. 5 வயதை தாண்டும் பட்சத்தில் குழந்தைகளுக்கு கருவிழி பரிசோதனை, கைரேகை பதிவுகளும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மூடியை தின்று 800 பாட்டில்கள் மதுவை குடித்த எலிகள்.. அதிகாரிகளை அதிரவைத்த அரசு ஊழியர்கள்.!

ஆதார் புதுப்பிப்பு :

இதனால் 5 முதல் 7 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்கள் சேவை மையங்களை அணுகி அதனை இணைத்துக் கொள்ளலாம். 7 வயதை தாண்டிய குழந்தைகளுக்கு ரூ.100 கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். 7 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எண், கைரேகை, கருவிழி இணைக்காத பட்சத்தில் ஆதார் அட்டை செயலிழக்கும் வாய்ப்பும் அதிகம். ஆகையால் கட்டாயம் குழந்தைகளின் பெற்றோர் ஆதார் தகவல்களை புதுப்பித்துக் கொள்வது நல்லது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement