ஜூலை 15, ஜார்கண்ட் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு சார்பில் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் புதிய மதுபான கொள்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கடைகள் ஒதுக்கீடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இதனை ஆன்லைன் மற்றும் குலுக்கல் முறையில் ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய விதிகள் அமலாகவிருக்கும் நிலையில், மதுபான கையிருப்பு தொடர்பாக கலால் துறை அதிகாரிகள் சார்பில் அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
802 மதுபாட்டிகளை காலி செய்த எலிகள் :
இதனிடையே தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான பாட்டில்கள் விற்பனை என்பது கணக்கில் வரவில்லை. இதனால் அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதிகாரிகள் இது குறித்து கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது எலிகள் சேர்ந்து மதுபான பாட்டில்களின் மூடியை தின்று மதுவை குடித்துவிட்டது என்று கூறி அதிகாரிகளை அதிர வைத்துள்ளனர். பேராசிரியரின் பாலியல் தொல்லை.. கல்லூரியில் தீக்குளித்து உயிருக்கு போராடிய மாணவி மரணம்.!
அபராதம் விதித்த அதிகாரிகள் :
இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். மேலும் இது குறித்து கலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தெரிவிக்கையில், "மதுபாட்டில்களை எலிகள் குடித்ததா? இல்லையா? என்பது எங்களுக்கு கவலை இல்லை. அரசு கொடுத்த பாட்டில்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். காலியான மது பாட்டில்களுக்கு சேர்த்து பணம் செலுத்த வேண்டும். மதுபானம் தொடர்பாக ஊழியர்கள் கூறிய பொய்யை ஏற்க முடியாது. இது முட்டாள்தனமான பதிலாக இருக்கிறது. மது பாட்டில்கள் திருடு போனதற்கான எந்த வழக்கும் அவர்கள் பதிவு செய்யவில்லை. இதனால் ஊழலை மறைக்கும் நாடகம் நடக்கிறது" என தெரிவித்துள்ளார்.