Corpses | Eye Ball - Both File Pic (Photo Credit Pexels Pixabay)

டிசம்பர் 14, படாவூன் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள படாவூன் மாவட்டம், மயூஜெரியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பூஜா மயூரா (வயது 20). இவரது கணவர் ஜுபீந்தர். தம்பதிகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற முடிந்த நிலையில், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: இதனிடையே, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பூஜா தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Fire Crackers Factory Blast: சாத்தூரில் சோகம்: பட்டாசு ஆலை வெடித்து, தொழிலாளி பரிதாப பலி.! 

பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு: பூஜா மயூராவின் உடல் படாவூன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை பெற்றுச் சென்று சுடுகாட்டில் தகனம் செய்ய முற்படும்போது, பெண்ணின் (Woman Corpse Missing Eyeballs) சடலத்தில் கண்கள் இல்லை என்பதை கண்டுள்ளனர்.

கண்கள் மாயம்: இதனையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, உடல் மறுபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பெண்ணின் சகோதரர் பிரமோத் மயூரா, பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் உடல் உறுப்பு திருட்டில் ஈடுபட்டதாக கூறி காவல் நிலையத்தில் உடனடியாக புகாரும் பதிவு செய்தார்.

துறை ரீதியான விசாரணை: மருத்துவமனை நிர்வாகத்திற்கும் விபரம் தெரியவந்ததால், பிரேத பரிசோதனை மேற்கொண்ட இரண்டு மருத்துவர்கள் மற்றும் பிணவரை ஊழியரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. அந்த விசாரணையின் போது, பிணவறையில் பணியாற்றி வந்த ஊழியர் மற்றும் இரண்டு மருத்துவர்களும், "பெண்ணின் சடலத்தில் இருந்து கண்கள் ஏற்கனவே இல்லாமல் இருந்தது. Tirupattur Shocker: வேனின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி: வீட்டு வாசலில், தாயின் கண்முன் நடந்த சோகம்.! 

தொடங்கிய விசாரணை: உறவினர்கள் அந்த சமயத்தில் ஆத்திரத்தில் இருந்ததால், அவர்களிடம் இந்த தகவல் தெரிவித்தால் இன்னும் பல பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால் அதனை கூறாமல் தவிர்த்தோம்" என்று கூறியுள்ளனர். இந்நிலையில், பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், மருத்துவர்கள் முகமது ஓவைஷ் மற்றும் ஆரிப் ஹுசைன் ஆகிய மருத்துவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவர்கள் கைதுக்கு கண்டனம்: இவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றமும் அனுமதி வழங்கி இருக்கிறது. மருத்துவர்கள் கைது தொடர்பான விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த மருத்துவர்கள் நலச்சங்கம், விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே மருத்துவர்கள் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடமும் தங்களின் கோரிக்கையை கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

தொடரும் மர்மம்: காவல் ஆய்வாளர் கௌரவ் பிஷ்னோய் தலைமயிலான அதிகாரிகள் இவ்வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மறுபிரேத பரிசோதனைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இளம்பெண்ணின் கண்களுக்கு என்ன ஆனது? என்பது தெரியாததால், தற்போது வரை பெண்ணின் கண்கள் மாயமான விவகாரத்தில் மர்மம் தொடர்கிறது.