Chicken Podimas (Photo Credit: Twitter)

ஜூலை 26, சமையல் குறிப்புக்கள் (Cooking Tips): நமது வீட்டில் நாம் என்னதான் தினமும் சத்தான காய்கறிகளை சமைத்து சாப்பிட்டு வந்தாலும், நமது நாவும்-மூக்கும் துரித உணவுகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளை நுகராமல் இருந்ததில்லை.

திரும்பும் திசையெல்லாம் சைவ உணவகம், அசைவ உணவகம், துரித உணவகம், சாலையோர சிற்றுண்டி உணவகம் என எண்திசையிலும் இருந்து நமது மூக்கை துளைக்கும் உணவுகளின் சுவைக்கு ஏற்ப, நமது மனமும் அவற்றை விரும்பும்.

கடைகளில் செய்யும் துரித உணவுகளை, நமது இல்லத்தில் நாமே செய்து சாப்பிடுவதும் தனி சுகம். இவை நமது உடலின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். நாம் வாங்கிவந்த சுவையான உணவு, தரமானதா? என்ற அச்சத்திற்கு இடம் அளிக்காமல் இன்று முட்டையில் பொடிமாஸ் செய்வதை போல சிக்கனில் சிக்கன் பொடிமாஸ் செய்வது எப்படி என காணலாம். Masturbation With Help of AI: செயற்கை நுண்ணறிவால் கையை உபயோகம் செய்யாமலேயே சுய இன்பம்.. அசத்தல் கண்டுபிடிப்பின் விபரம் இதோ..!

தேவையான பொருட்கள்:

எலும்பு இல்லாத சிக்கன் - 500 கிராம்,

இஞ்சி, பூண்டு விழுது - 4 கரண்டி,

பச்சை மிளகாய் - 4,

குடை மிளகாய் (விருப்பம் இருப்பின்) - 2,

கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள் - தலா 2 கரண்டி,

சோம்பு - 1/2 கரண்டி,

மஞ்சள் தூள் - 1/4 கரண்டி,

கறிவேப்பில்லை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப,

உப்பு & எண்ணெய் - தேவைக்கேற்ப..

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை தனித்தனியே பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். Forest Fire: ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடும் வெயில்; பற்றி எரியும் காடுகள்.. அதிர்ச்சி வீடியோ வெளியானது.!

சிக்கனை நன்கு கழுவி, வானெலியில் சிக்கன், உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் ஆகியவரை சேர்த்து நன்கு வேகும் வகை வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கி வெந்து வந்ததும் ஆறவைத்து மிஸ்கியில் தேங்காய் துருவல் பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின் வானெலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பில்லை போட்டு முதலில் தாளிக்க வேண்டும். பின் பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்திருக்கும் சிக்கன், குடை மிளகாய் சேர்த்து மீண்டும் நன்கு கிளற வேண்டும். குடை மிளகாய் வேக தொடங்கியதும் மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு (தேவையான அளவு) ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இவை உதிரியாக தயாரானதும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் பொடிமாஸ் தயார்.