Road Accident 6 Died: அதிவேகத்தில் நொடியில் நடந்த சோகம்; கார் கால்வாய்க்குள் பாய்ந்து 6 பேர் பரிதாப பலி.!

இரவோ-பகலோ சாலைகளில் பயணம் செய்யும்போது மிதமான பயணமே எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது. அலட்சியமாக, அதீத நம்பிக்கையுடன் அதிவேகத்தில் பறந்தால் கட்டாயம் விபத்தில் சிக்கி உயிரை இழக்க நேரிடும்.

Kanpur Car Accident (Photo Credit: @SachinGuptaUP X)

பிப்ரவரி 05, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், தேராபூர் மற்றும் சிவராஜ்பூர் கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் 8 க்கும் மேற்பட்டோர், நேற்று தங்களது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிக்லஸிக்கு சென்று இருந்தனர். அந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு, குடும்பத்தினர் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு திருமிக்கொண்டு இருந்தனர்.

மர்ம விலங்கு குறுக்கிட்டு சோகம்: இவர்கள் பயணம் செய்த கார் ஜெகநாத்பூர் கிராமத்திற்கு அருகே வந்துகொண்டு இருந்தது. காரில் 8 க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில், அதிவேகத்தில் (Kanpur Road Accident) பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச்சமயம், திடீரென மர்ம விலங்கு ஒன்று இவர்களின் வாகனத்தில் குறுக்கீட்டுள்ளது. Coimbatore LULU Mall: கோவை லுலு மாலில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை; துர்நாற்றம் வீசியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சி.! 

Accident (File Pic)

6 பேர் பரிதாப பலி: இதனால் விலங்கின் மீது வாகனம் மோதாமல் இருக்க வாகனத்தை திருப்ப, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கால்வாய்க்குள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் உருகுலைந்துபோன காரில் பயணம் செய்த 2 சிறுமிகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தேராபூர் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் விபத்து: விபத்தில் உயிரிழந்தவர்கள் 6 பேரில் 5 பேரின் அடையாளம் ஓட்டுநர் விகாஸ் (வயது 42), சிறுமி குஷ்பூ (வயது 17), பிராச்சி (வயது 13), சஞ்சு (வயது 55), சிறுவன் கோலு (வயது 16) என காணப்பட்டுள்ளது. எஞ்சிய ஒருவரின் அடையாளம் சேகரிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement