Coimbatore LULU Mall Chicken Spoiled Issue (Photo Credit: @PolimerNews X)

பிப்ரவரி 05, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர், பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் லுலு மால் செயல்பட்டு வருகிறது. இந்த மாலில் இல்லாத அத்தியாவசிய பொருட்களே இல்லை என்பதை போல, சமையல் பொருட்களில் தொடங்கி பல வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

சிக்கனில் துர்நாற்றம்: இந்நிலையில், கோவையில் உள்ள பல்லடம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் லால். இவர் நேற்று மதியம் 2 மணியளவில் தனது குழந்தைகள் ஆசையாக கேட்டார்கள் என, அங்குள்ள புதூர் லூலூ மாலுக்கு வந்து சிக்கன் வாங்கி சென்று இருக்கிறார். சிக்கனை வீட்டிற்கு கொண்டு சென்று சுத்தம் செய்ய முற்பட்டபோது, அதில் துர்நாற்றம் வீசி இருக்கிறது.

ஒப்புக்கொள்ளலும் - மறுப்பும்: இதனையடுத்து, சிக்கன் இறைச்சி கெட்டுப்போயுள்ளதை உறுதி செய்த கணேஷ், உடனடியாக லூலூ மாலுக்கு மீண்டும் வந்து, பணியில் இருந்த அதிகாரிகளிடம் விபரத்தை கூறியுள்ளார். முதலில் சிக்கனை சோதனை செய்த அதிகாரி, சிக்கன் கெட்டுப்போயுள்ளதை உறுதி செய்துள்ளார். பின், அதற்கான தரநிர்ணய அதிகாரி வந்து சோதித்துவிட்டு, சிக்கன் கெட்டுப்போகவில்லை என கூறி மழுப்பலாக பேசி இருக்கிறார். Minnesota Mother Arrested: 2 சிறார்களுடன் ஒரே நேரத்தில் விடுதியில் உல்லாசம்; 38 வயது பெண்மணி கைது.! 

Coimbatore LULU Mall (Photo Credit: @UpdatesChennai X)

வாடிக்கையாளர் கனிவான வேண்டுகோள்: இதனால் கணேஷ் லால் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஊடகத்தினர் உட்பட சமூக ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிக்கன் மாதிரிகளை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து பேசிய கணேஷ் லால், "நான் நேற்று மதியம் 2 மணிக்கு சிக்கன் வாங்கினேன். பெரும்பாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலையில் பலரும் சிக்கன் வாங்க வந்திருப்பார்கள். அவர்களின் நிலை என்பது தெரியவில்லை. காலை இவர்கள் சிக்கனை சுத்தப்படுத்தி இருந்தாலும், 2 மணிக்குள் துர்நாற்றம் வர காரணம் என்ன?. இவ்வாறான செயல்கள் கண்டிக்கத்தக்கது.

பணம் வேண்டாம், தரமே வேண்டும்: அவர்கள் என்னை தனியாக அழைத்து பேசலாம், சமாதானம் பேசலாம் என அழைத்தார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. புகார் கொடுப்பதோ, கண்டனம் தெரிவிப்பதோ இங்கு முக்கியமில்லை. யாரேனும், சிக்கனை சரிவர சோதிக்காமல் சமைத்தால் அவர்களின் நிலை என்ன?. உரிய முறையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். நான் கொடுத்த பணத்தை அவர்கள் திரும்பி கொடுத்தாலும் எனக்கு தேவையில்லை" என கூறினார்.