Heart Attack Death: "நொடியில் பறிபோன உயிர்" - நண்பர்களுடன் ஆசையாக படம்பார்த்தவருக்கு நேர்ந்த சோகம்.. பகீர் வீடியோ உள்ளே.!
ஆசையாக நண்பர்களை அழைத்துக்கொண்டு மாலில் படம்பார்க்க சென்ற 32 வயது இளைஞர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நண்பர்களின் மனதை உலுக்கும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஆகஸ்ட் 28, லக்கிம்பூர் கேரி (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி (Lakhimpur Kheri) மாவட்டம், மஹெவாகஞ்ச், சதார் கோட்வாலி பகுதியில் தனியார் மால் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த அக்ஷத் திவாரி (வயது 32) என்பவர், தனது நண்பர்களுடன் மாலுக்கு சென்றுள்ளார்.
அங்கு திரைப்படம் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக நண்பர்களுடன் சுற்றிவந்த நிலையில், திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நண்பர்களை அழைத்துக்கொண்டு அங்குள்ள ரஜத் மருந்தகத்திற்கு விரைந்து இருக்கிறார்.
ஆனால், அவர் மருத்துவ உதவிகளை முதற்கட்டமாக பெறுவதற்கு முன்னதகவே, நண்பர்களுடன் நடந்து செல்லும்போதே மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். Neeraj Chopra: வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா; தங்கம் வென்று அசத்தல்.. கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!
அக்ஷத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பின் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அக்ஷத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்கையில், மருந்தகத்திற்கு செல்லும்போது அக்ஷத் மயங்கி விழுந்து மரணமடைந்த காட்சிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருப்பது உறுதியானது. இந்த சம்பவம் அகஷத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
लखीमपुर खीरी के फन मॉल में फिल्म देखने गये 32 वर्षीय अक्षत तिवारी की हार्ट अटैक आने पर हुई मौत। महेवागंज में रजत मेडिकल स्टोर के नाम से दवाई की दुकान चलाते थे अक्षत तिवारी। सदर कोतवाली के फन मॉल की घटना। pic.twitter.com/6QkaJHVbXK
— SANJAY TRIPATHI (@sanjayjourno) August 27, 2023
(The above story first appeared on LatestLY on Aug 28, 2023 10:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

