ஆகஸ்ட் 28, புடாபெஸ்ட் (Sports News): ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் வைத்து, 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. கடந்த 9 நாட்களாக நடைபெற்ற போட்டியின் இறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன.
நேற்றைய ஆட்டத்தில் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்றது. இறுதிப்போட்டிகளத்தில் 12 பேர் இருந்த நிலையில், அவர்களில் 3 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இதனால் பலரும் போட்டியை ஆவலுடன் கண்டுரசித்தனர்.
இந்த போட்டியின் இறுதியில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்தியா 40 ஆண்டுகாலமாக உலக வரலாற்றில் ஈட்டி எரிதலில் தங்கம் வென்றது இல்லை. Chengalpattu Women Suicide: முன்னாள் காதலனை தேடிச்சென்ற இளம்பெண் தற்கொலை; விசிக பிரமுகர் மீது பரபரப்பு புகார்..!
அந்த இடத்தினை தற்போது நீரஜ் சோப்ரா நிவர்த்தி செய்து, இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்தியாவுக்கு பல விஷயங்களில் போட்டித்தன்மையை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எரிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
பிற இந்தியர்கள் கிஷோர் 84.77 மீ, டி.பி மனு 84.14 மீட்டர் எரிந்து ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை பெற்றனர். நீராஜின் பதக்கம் உலகளவில் இந்தியாவுக்கு கிடைத்த 3ம் பதக்கம் ஆகும். முன்பு நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஹரியானா மாநிலம் தந்த நீரஜ் சோப்ரா, இன்று உலகளவில் கவனிக்கப்படும் இந்தியராக உயர்ந்து நிற்கிறார்.