National Panchayati Raj Day 2024: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்.. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?

இந்த ஆண்டு 31ஆவது தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.

National Panchayati Raj Day 2024: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்.. இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?
National Panchayati Raj Day (Photo Credit: @bgsnps1234 X)

ஏப்ரல் 24, புதுடெல்லி (New Delhi): மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சி காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (National Panchayati Raj Day) ஏப்ரல் 24 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த சட்டத்தின் நோக்கமே, கிராம மக்களுக்கம் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே. அதிகாரத்தைப் பரவலாக்கி, மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானதாக மாற்றம் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டது.

பஞ்சாயத்தின் முக்கியத்துவம்: இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள். அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை ந டத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது. HBD Sachin Tendulkar: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கோடானகோடி ரசிகர்களின் உத்வேக நாயகன், சச்சின் டெண்டுலருக்கு இன்று பிறந்தநாள்.!

பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போது, வறுமை ஒழிப்பு, பட்டினி இல்லாத நிலை, அனைவருக்கும் கல்வி ஆகிய 3 இலக்குகளில் ஊரக வளர்ச்சித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இலக்குகளில் அடைவதற்கான குழுவின் தலைவராக ஊரக வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் உள்ளார். இவரின் கண்காணிப்பில் இந்த இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Apr 24, 2024 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).