Sachin Tendulkar Birthday Poster (Photo Credit: @Cricbuzz X)

ஏப்ரல் 24, மும்பை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கவனிக்கப்படுபவர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்ற சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar). தனது 11 வயதில் கிரிக்கெட் மீது ஏற்பட்ட ஈர்ப்பைத் தொடர்ந்து, அதிரடியாக கிரிக்கெட் விளையாடி வந்த சச்சின், 16வது வயதிலேயே பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ஒருநாள் போட்டிகள், டி20, உலக கோப்பை உட்பட பல்வேறு ஆட்டங்களில் தனது திறமையை அதிரடியாக வெளிப்படுத்திய சச்சின், சர்வதேச அளவிலான போட்டிகளில் 30 ஆயிரம் ரன்களை குவித்த ஒரே வீரர் என்ற பெருமையும் பெற்றார். கிரிக்கெட்டில் இந்தியாவை உலகறிய செய்த சச்சின் டெண்டுல்கரின் திறமையை பாராட்டி, மத்திய அரசு பாரத ரத்னா விருதை கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்கியது. Speeding Bus Hits Bike: பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரைவிட்ட இருசக்கர வாகன ஓட்டி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! 

கிரிக்கெட் உலகின் நான்கெழுத்து மந்திரம் சச்சின்: இதன் வாயிலாக இளம் வயதிலேயே பாரத ரத்னா விருதை பெற்றவர் என்ற சாதனையையும் படைத்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியில் சச்சினும் இடம்பெற்றிருந்தார். பிஸ்டன் பத்திரிகையில் கடந்த 150 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் சச்சின் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விலகிக் கொண்ட சச்சின், அடுத்தடுத்து பல வீரர்கள் அணியில் இடம்பெற வாய்ப்பளித்து இன்று இந்திய அணியின் தரம் உயர்ந்து இருக்கிறது. கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை தாதர் பகுதியில் பிறந்த சச்சின் டெண்டுல்கர், இன்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக, இந்தியாவின் அடையாளமாகவும் இருக்கிறார்.

இன்று சச்சினுக்கு பிறந்தநாள்: சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும் அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் இருக்கின்றனர். இன்று அவரது பிறந்த நாள் ஆகும். அவருக்கு 51 வயது ஆகிறது. சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நீங்களும் உங்களின் வாழ்த்துகளை பதிவு செய்யலாமே!

கிரிக்கெட்டின் கடவுளுக்கு வாழ்த்து:

மாஸ்டர் பிளாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்து:

கிரிக்கெட் ரசிகர்களின் நான்கெழுத்து மந்திரம் சச்சின்:

10 என்பது எண் அல்ல எங்களின் உணர்வு: