Kargil Vijay Diwas 2024: கார்கில் விஜய் திவாஸ்.. பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து கார்கில் போரில் வென்ற கதை..!
கார்கில் போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜூலை 26, புதுடெல்லி (New Delhi): இந்தியா தனது கார்கில் போர் வெற்றியின் (Kargil Vijay Diwas) 25வது ஆண்டு விழாவை இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடுகிறது. இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. தொடர்ந்து நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர். Tamil Amman Movies List: தெய்வீகத்தன்மையை வளர்த்த ஆன்மிக திரைப்படங்கள்; முக்கியமான அம்மன் படங்கள் லிஸ்ட் இதோ.!
வரலாறு: ஜம்மு காஷ்மீரில் கார்கில் பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் முன்னெடுத்தது. அந்த சமயம் கடும் குளிரும் கொட்டும் பனியும் நிலவியது. அதனையும் மீறி இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிர்த்து போரிட்டு விரட்டி அடித்தனர். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் ஜூலை 26 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.