நவம்பர் 07, சென்னை (Chennai News): கடந்த சில மாதங்களாகவே மாநில அளவில் பிரபலமாக இருக்கும் திரைத்துறை நடிகர்கள், நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் அல்லது போன் கால் மூலமாக தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட நடிகை திரிஷா, நடிகர் விஜய் உட்பட பலரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெறும் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரிய வந்தாலும், மிரட்டல் கொடுக்கும் நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு பல்வேறு சிக்கல்களும் நீடித்து வருகிறது. Thalaivar 173: அப்படிப்போடு.. கமல் ஹாசனுடன் கைகோர்த்த ரஜினிகாந்த்.. தலைவர் 173 அப்டேட்.. இயக்குனர் இவர்தானாம்.!
திரை பிரபலங்கள் டார்கெட்:
இந்நிலையில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் நடிகர் அருண் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் போலியான தகவலை அளித்தது தெரியவந்துள்ளது. இதேபோல திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கும், பிரபல தமிழ் நடிகை குஷ்புவின் வீடு உட்பட ஏழு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் வீட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் டிஜிபி அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை:
இதன் பெயரில் அதிகாரிகள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மின்னஞ்சலில் கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகை, அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்புவின் வீடு, எஸ்.வி.சேகர் வீடு உட்பட ஏழு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது வெடிக்கும் என்றும் மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தற்போது காவல்துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.