நவம்பர் 09, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) சீரியல் இல்லத்தரசிகளிடையே மிகுந்த பிரபலமானதாக இருந்து வருகிறது. எஸ். குமரன் இயக்கத்தில், இதுவரை 800 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடரில் முத்து, மீனா, விஜயா, ரோகினி ஆகிய கதாபாத்திரங்கள் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியா, விஜய கதாபாத்திரத்தில் அணிலா ஸ்ரீகுமார், அண்ணாமலை கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகர் சௌந்தரராஜன் நடித்து வருகின்றனர். Bigg Boss Double Eviction: பிக் பாஸ் 9-ல் அதிரடி ட்விஸ்ட்.. இந்த வாரம் எவிக்சனில் சம்பவம்.. யாரென்று தெரியுமா?
மீனாவிடம் வசமாக சிக்கிய ரோகிணி:
இந்த நெடுந்தொடரில் ரோகிணி தனது முந்தைய வாழ்க்கையை மறைத்து வாழ்ந்து வருகிறார். கல்யாணி என்ற தனது உண்மை பெயரை மறைத்து ரோகிணி எனும் பெயரில் மனோஜுடன் வாழ்ந்து வருகிறார். தனது முதல் திருமணம் மற்றும் குழந்தையை மறைத்து பணக்கார வீட்டு பெண்ணாக முதலில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் முத்துவால் மாட்டிக்கொள்கிறார். இதன் பின் திருந்தி வாழ்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது பொய்களை மறைக்க மீண்டும் முயன்று வந்தார். இந்நிலையில் ரோகிணியின் முதல் கணவரின் அண்ணன் குடும்பத்தினர் சென்னை வந்ததால் ரோகிணி மாட்டிக்கொள்வார் என கூறப்பட்டது. ஆனால் தனது தாயின் மூலமாகவே தற்போது ரோகினி மீனாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நடைபெற்று உள்ளது.
பளார் விட்ட மீனா:
குழந்தை கிரிஷ் இவர்களின் வீட்டிலிருந்த போதும் எந்த விதமான உண்மையையும் சொல்லாத ரோகினி தற்போது தனது தந்தைக்கு திதி கொடுக்க வந்தபோது மீனாவிடம் வசமாக சிக்கி கொள்கிறார். ரோகிணியின் தாய் தனது மகள் மற்றும் பேரனை அடையாளப்படுத்துவதை மீனா கண்கூடாக கண்டு அதிர்ந்து போன நிலையில், பளாரென ரோகிணியின் கன்னத்தில் அடி விடுகிறார். இதனால் வரும் வாரத்தில் ரசிகர்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்த பல பரபரப்பு சம்பவங்கள் இடம்பெறும் காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறகடிக்க ஆசை ரோகிணி சிக்கிக்கொண்ட ப்ரோமோ: