ஜூலை 12, புதுடெல்லி (New Delhi): மக்கள் கட்டாயம் பிளாஸ்டிக் அவர்கள் பேக்கிங் பொருட்கள் கிட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மக்கள் காகிதப் பைகளை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகளை விட காகிதப் பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 12ஆம் தேதி காகிதப் பை தினம் கொண்டாடப்படுகிறது.
வரலாறு: பிரான்சிஸ் வோல் (Francis Wolle) (1817-1893) என்பவர் காகிதப் பைகளை பெருமளவில் உற்பத்தி செய்யும் முதல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர். வோல்லின் கண்டுபிடிப்பு 1852 இல் காப்புரிமை பெற்றது. இந்தக் கண்டுபிடிப்புக்கு முன், காகிதப் பைகள் தனித்தனியாக கையால் செய்யப்பட்டன, எனவே அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பிரான்சிஸ் வோல் என்பவரால் முதல் காகித பை இயந்திரத்தை கண்டுபிடித்ததையும் இந்த நாள் நினைவுபடுத்துகிறது. YouTuber TTF Vasan's Tirupati Temple Video: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செய்த பிராங்க்.. தேவஸ்தானம் நடவடிக்கை..!
காகிதப் பை பயன்படுத்துவதன் நன்மைகள்: பிளாஸ்டிக் பைகளுடன் ஒப்பிடும்போது காகிதப் பைகள் தயாரிப்பதற்கு குறைவான ஆற்றலே தேவைப்படும். இவை எளிதில் மட்கும் தன்மை கொண்டவை, 100% மறுசுழற்சி செய்யக்கூடியவை. காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடவும் உதவும்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள்:
பிளாஸ்டிக் பையில் டீ வாங்காதே
பித்தப் பையில் கான்சர் வாங்காதே
வாழை இலையில் சாப்பாடு ....ஆயுசு நூறு
பிளாஸ்டிக் இலையில் சாப்பாடு .. ஆயுசு கேடு
பூமியைக் கெடுக்கும் பூதம் யாரு...?
பிளாஸ்டிக் என்றே அதற்குப் பேரு
வீதி எங்கும் பறக்குது பார் பிளாஸ்டிக் குப்பை
விழி பிதுங்கி அழுகுது பார் பூமிப் பந்து
பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீரு
பூமித்தாய்க்கோ கண்ணீரு Ather Energy's Halo Smart Helmet: எல்லா ஹெல்மெட்டும் உயிரை காப்பாத்தாது.. ஏத்தர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் அறிமுகம்..!
ஒத்தை ரூபா பொருளுக்கும்... பிளாஸ்டிக் கவரா...?
ஒத்தை பைசா மதிப்பில்லாமல் பூமி.. அழியுது ஜோரா...
கொஞ்சம் கொஞ்சமாய் ...சேரும் பிளாஸ்டிக்
கெஞ்ச கெஞ்ச ...பூமியைக் கெடுக்குமே..
வேண்டும் வேண்டும் பூமி வேண்டும்
நாங்கள் வாழ பூமி வேண்டும்
காடு மேடு நாடெல்லாம் .. கிடக்குது பார் பாலிபேக்
கண்ணாமுழி திருகி சாக...... கிடக்குது பார் உலகம்
ரோசாப்பூவு.... பூமித்தாய்
நாசமாக்குது.... பிளாஸ்டிக்பேய்
- கவிதைக்கு நன்றி, முருகானந்தன்.