ஜூலை 12, திருப்பதி (Cinema News): கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன் (TTF Vasan), விலையுயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வந்தார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அதிலும் காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். டிடிஎஃப் வாசன் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனையோடு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.
பிராங்க் வீடியோ: இந்நிலையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவருடைய ஒளிப்பதிவாளர் அசீஸ் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த அறையை திறப்பது போன்ற வீடியோ இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுள்ளார். அதனை Tirupati Funny video என்ற பெரியல் டிடிஎஃப் வாசன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளி மாநிலம், வெளிநாடுகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். டிடிஎஃப் வாசனும் அவரது நண்பர்களும் அப்படிப்பட்ட பக்தர்களிடம் பிராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். Ather Energy's Halo Smart Helmet: எல்லா ஹெல்மெட்டும் உயிரை காப்பாத்தாது.. ஏத்தர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட் அறிமுகம்..!
தேவஸ்தானம் நடவடிக்கை: இந்த செயலுக்காக டிடிஎஃப் வாசனுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பதி தேவஸ்தானமும் டிடிஎஃப் வாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் குறும்பு வீடியோ எடுப்பது கேவலமான செயல், அத்தகைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்துள்ளது. மேலும், டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை செய்து வருகிறது.
తిరుమల వేంకటేశ్వర స్వామి వారి క్యూలైన్లో టీటీఎఫ్ వాసన్ గ్యాంగ్ తీసిన వీడియోలు వైరల్ https://t.co/V2DTjBib0B pic.twitter.com/1q4jtNyrH2
— Telugu Scribe (@TeluguScribe) July 11, 2024