ஜூலை 11, புதுடெல்லி (New Delhi): அனைத்து ரக வாகனங்களும், முக்கிய பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. எனினும், ஒருசில பாதுகாப்பு நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்வது நல்லது. அந்தவகையில் பைக், ஸ்கூட்டரில் செல்லும் போது ஹெல்மெட் (Helmet) அணிவது பல்வேறு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வழி வகுக்கிறது. பொதுவாக ஏத்தர் (Ather) நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஏத்தர் ரிஸ்ட்டா என்ற ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டருடன் ஹாலோ என்ற ஸ்மார்ட் ஹெல்மெட்டையும் (Halo Smart Helmet) அறிமுகப்படுத்தியது. இந்த ஹெல்மெட்டை தயாரிக்கும் பணிகளையே ஏத்தர் எனெர்ஜி தற்போது தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் பதிவையே நிறுவனத்தின் சிஇஓ-வான தருண் மேத்தா தற்போது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கின்றார். BTS Jin News: ராணுவப் பயிற்சியை முடித்த பிடிஎஸ் ஜின்.. அந்த வருவாயை என்ன செய்தார் தெரியுமா?!
சிறப்பம்சங்கள்: இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில் ஆட்டோ வியர் டிடெக்ட் டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஹெல்மெட் சரியாக போடப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து எச்சரிக்கும். மேலும் ஹெல்மெட் உள்ளே ஓடும் மியூசிக் மற்றும் கால்களை ஸ்கூட்டரின் டேஷ்போர்டு ஸ்கிரீனிலேயே கண்ட்ரோல் செய்ய முடியும். ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக வெளியில் உள்ள ஹாரன் சத்தம் உள்ளிட்ட சில முக்கியமான சத்தங்கள் ஹெல்மெட் உள்ளே கேட்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டிற்கு ரூபாய் 12,999 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் எல்லாம் ஐஎஸ்ஐ மற்றும் டிஓடி தரச்சான்றுபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The early production samples of Halo are here! Main batches will start rolling out in a few weeks.
They look and feel fantastically premium!
And hear that magnetic click!👌💯❤️ pic.twitter.com/IoBe7obhOg
— Tarun Mehta (@tarunsmehta) July 5, 2024