Turkish Delight Recipe: டர்கிஸ் டிலைட் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

டர்கிஸ் டிலைட் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Turkish Delight (Photo Credit: Pixabay)

மே 21, சென்னை (Kitchen Tips): வானளியில் பெரிய சைஸில் 2 கப் அளவு சர்க்கரை, அதே கப்பில் முக்கால் கப் அளவு தண்ணீர், அரை தே.கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கம்பிப்பதம் அளவிற்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். பின் சிறிய சைஸ் அரை கப் கான்ஃபார் மாவு அதே கப்பில் ஒன்றை கப் அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொண்டு, பின் மற்றொரு கடாயில் மிதமான சூட்டில் கிளர வேண்டும். சிறிது நேரத்தில் கண்ணாடி பதத்திற்கு கெட்டியாக ஆரம்பிக்கும். பின் அல்வா போன்று வரும் போது தயாரித்து வைத்த சர்க்கரைப் பாகுவை செட் கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிதமான சூட்டிலேயே அடிபிக்காதவாறு கலந்து வந்தால், இலகுவாக மாறும். Drug Culture In The Tamil Film Industry: போதையில் தத்தளிக்கும் கோலிவுட்.. பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா..!

மீண்டும் 15 முத 20 நிமிடத்தில் சற்று கட்டியாக பசை போல மாற ஆரம்பிக்கும் போது சிறிது ரோஸ் எசன்ஸ் மற்றும் தங்களுக்கு பிடித்த ஃபுட் கலரையோ அல்லது ஃபேமஸ் டர்க்கி டிலைட்டின் கலரான ரெட் கலரையோ ஒரு துளி சேர்த்து நன்கு கிளரவும். கலர் முழுவதும் கலந்த பின் எண்ணெய் தடவிய பாத்திரத்தில் இதனை கொட்டி சம அளவில் பரப்பி விடுங்கள். 2 அல்லது 3 மணி நேரத்திற்கு பின் நன்கு செட் ஆகிவிடும். சர்க்கரைத்தூள் மற்றும் கான்ஃபார் மாவு கலந்து வைத்துக்கொள்ளவும். பின் கண்ணாடி போல் இருக்கும் டிலைட்டை, சர்க்கரைத்தூள் பரப்பிய ஒரு தட்டிற்கு மாற்றி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இவைகளை அந்த சர்க்கரைத்தூள் மாவில் பிரட்டி எடுத்து கடித்து இழுக்கலாம்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement