நவம்பர் 15, சென்னை (Cooking Tips Tamil): வாரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு வீட்டிலும் சிக்கன், மட்டன், மீன் நண்டு என அசைவ வகை உணவுகள் பல வகையாக சமைத்து சாப்பிடுவர். அந்த வகையில் பெரும்பாலான மக்களால் சாப்பிடப்படும் சிக்கனில் எப்போதும் சாதாரண வகையிலான குழம்பு, 65, கிரேவி போன்றவைகளை வீட்டில் சமைத்து சாப்பிடுவார்கள். இன்று ஒரு மாறுதலுக்காக சுவையான பள்ளிபாளையம் முறையிலான தரமான சிக்கன் செய்வது எப்படி? என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். Pregnancy Tips: மகப்பேறு காலங்களில் மரணம் ஏன்? மருத்துவரின் விளக்கம்..!
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - தேவைக்கு ஏற்ப
நறுக்கிய சின்ன வெங்காயம் - 250 கிராம்
கடுகு - சிறிதளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி
சிக்கன் - அரை கிலோ
காய்ந்த மிளகாய் - 12
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
தேங்காய் - 1/4 கப்
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின் அதனுடன் சிக்கன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வரை கிளறவும்.
- அடுத்ததாக துருவி வைத்த தேங்காயையும் சேர்த்து கிளறவும்.
- பின் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கனை வேக விடவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்தால் சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.