Health Tips: ஒரே பழத்தில் பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு: மாதுளைப்பழத்தின் அற்புதமான பயன்கள்..!

கடைகளில் எளிதில் அணுகும் வகையில் இருக்கும் மாதுளைப்பழம், தனக்குள் ஏராளமான நன்மைகளை மறைத்து வைத்துள்ளது. வாரம் குறைந்தது 3 நாட்களாவது மாதுளை எடுத்துக்கொள்வது, உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

Health Tips: ஒரே பழத்தில் பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு: மாதுளைப்பழத்தின் அற்புதமான பயன்கள்..!
Pomegranate or Mathulai (Photo Credit: Pixabay)

நவம்பர் 11, திட்டக்குடி (Health Tips News): நமது ஊர்களில் எளிதாக கிடைக்கும் மாதுளைப்பழம் (Mathulai Bene), உடலுக்கு மிகவும் நன்மையை தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாகும். அவ்வப்போது மாதுளைப்பழத்தை சாப்பிடுவது பிணவாயு இரத்தத்தில் அதிகரிக்க உதவி செய்கிறது. இதனால் உடல் பலமில்லாமல் உணரும் நபர்கள், நோயாளிகள் சுறுசுறுப்புத்தன்மை பெற மாதுளையை அதிகம் சாப்பிடலாம்.

புற்றுநோயை தடுக்கும்:

மாதுளை பழத்துடன் கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வருவது, ஆண்கள் - பெண்கள் என இருபாலருக்கும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க உதவி செய்யும். அதேபோல, பிற வகை புற்றுநோயையையும் கட்டுப்படுத்தும். தினமும் மாதுளைச்சாறு அருந்தி வருவது, மூளையில் இருக்கும் செல்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். இதனால் ஞாபக மறதி, மந்தம் போன்றவை சரியாகும்.  Health Tips: இரவில் உள்ளாடை அணிந்து உறங்குவது சரியா? தவறா? முழு விவரம் உள்ளே..!

தாம்பத்தியத்திற்கு உதவி:

உடல் குறைபாடு மற்றும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தாம்பத்திய விஷயங்களில் திருப்தி இல்லாமல் இருக்கும் தம்பதிகள், மாதுளைப்பழக்கத்தை சர்க்கரை கலக்காமல் குடித்து வந்தால், உடலில் இருக்கும் நரம்புகள் வலுப்பெற்று தாம்பத்தியத்தில் நல்ல நெருக்கம் ஏற்படும். அதேபோல, உடலின் இயக்கத்திற்கு முக்கிய துணையாக இருக்கும் இரத்தம் அதிகரிக்க மாதுளை உதவும்.

இரத்த சுத்திகரிப்பு:

இரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை அகற்றவும், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் மாதுளை உதவி செய்கிறது. கொழுப்பை குறைக்கும் சக்தியை இயற்கையாக கொண்ட மாதுளை இதய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இரத்த குழாயில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுவதால், இதய பாதிப்புகளும் தவிர்க்கப்படும். Spanish Omelette Recipe: பாரம்பரியமான ஸ்பானிஷ் ஆம்லெட் ருசியாக எப்படி செய்வது..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும்:

உடலின் இயக்கத்திற்கு உந்துசக்தியாக இருக்கும் எலும்புகள் உறுதியாக இருக்கவும், தேய்மானத்தை குறைக்கவும் இளம் வயதில் இருந்து மாதுளைப்பழத்தை எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும். மாதுளையில் இருக்கும் வைட்டமின் ஈ, சி, கே போன்றவை உடல் நலம், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உடலில் இருக்கும் பாக்டீரியா, நுண்ணுயிரி ஆகியவற்றை அழித்து உடல்நலனை மேம்படுத்துகிறது.

(The above story first appeared on LatestLY on Nov 11, 2024 08:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).